அங்காரதாரையுடன் அனுமன் பேசுதல்

                         கலிவிருத்தம்

 4815.

வெங்கார்நிறப் புணரி வேறேயும் ஒன்றப்
     பொங்குஆர்கலிப் புனல்தரப்பொலிவதேபோல்
'இங்குஆர்கடத்திர்' எனை என்னா எழுந்தாள்
     அங்கார தாரைபெரிது ஆலாலம் அன்னாள்.

     பெரிது ஆலாலம்அன்னாள் -பெரிய ஆலகால விடத்தைப் போன்ற;அங்கார தாரை - அங்கார தாரை என்பவள்; அப்பொங்கு புனல் ஆர்கலி- அந்த பொங்குகின்ற புனலைப் பெற்றுள்ள கடல்; வேறேயும் ஒன்று -தன்னினும் வேறுபட்ட ஒரு; வெங்கார் நிறப் புணரி - வெப்பமான கரிய நிறம்பெற்ற கடலை; தர - பெற்றெடுத்து; பொலிவதே போல் -
விளங்குவதையேஒப்ப (தோன்றி); எனை - என்னை; இங்கு ஆர் கடத்திர்
-
இங்கேதாண்டிப் போகின்றீர்; என்னா - என்று கூறி; எழுந்தாள் -
வளர்ந்தாள்.

     கடல் மற்றொருகடலை ஈன்றதுபோல் அங்கார தாரை கடலில்
தோன்றினாள். அவள் என்னை எவர் கடக்கப் போவது என்று கூறினாள்.
அங்கார தாரை - நெருப்புக் கொழுந்து போன்றவள். ஒன்று புணரியை -
எனக்கூட்டி யுரைக்கப் பெற்றது.                              (75)