4818. | நின்றாள்நிமிர்ந்து அலைநெடுங் கடலின் நீர்தன் வன்தான் அலம்பமுடிவான் முகடு வௌவ அன்றுஆய்திறத்தவன், அறத்தை அருளோடும் தின்றாள்ஒருத்திஇவள் என்பது தெரிந்தான். |
நிமிர்ந்துஅலைநெடுங் கடலின் நீர் - பெருகி அலையுடன் கூடிய கடலின் தண்ணீரானது; தன்வன்தாள் - தன்னுடைய வலிமையான பாதத்தை; அலம்ப - கழுவ; வான் முகடு முடி வௌவ - ஆகாயத்தின் உச்சியை தலை அளாவ; நின்றாள் - (அனுமனுக்கு எதிரே) நின்றாள்; ஆய் திறத்தவன்- ஆராயும் வலிமைபெற்ற அனுமன்; இவள் - இந்த அரக்கி; அறத்தை -தருமத்தை; அருளோடும் தின்றாய் ஒருத்தி - கருணையுடன் சேர்த்துஉண்டாளாகிய ஒருத்தி; என்பது - என்னும் உண்மையை; அன்று தெரிந்தான்- அப்போது தெரிந்து கொண்டான்; அரக்கியானவள்பேருருக்கொண்டு நின்றாள். அனுமன் இவள் அறத்தையும் அருளையும் தின்ற ஒருபெண் என்பதை அறிந்தான். அலம்புதல் - கழுவுதல்.ஆழி வடிம்பு அலம்ப நின்றான் என்று நளவெண்பா பேசும். (78) |