4823. | கள்வாய் அரக்கி கதற, குடர்கணத்தில் கொள்வார் தடக்கையன் விசும்பின்மிசை கொண்டான் முள்வாய்பொருப்பின்முழை எய்திமிக நொய்தின் உள்வாழ்அரக்கொடு எழு திண்கலுழன் ஒத்தான். |
கள்வாய் அரக்கி- கள்ஒழுகும் வாயை உடைய அங்கார தாரை; கதற- கூக்குரலிடும்படி (உடலைப் பிளந்து); வார்குடல் கொள் தடக்கையன் -நீண்ட குடலைப் பற்றிய நீண்ட கையை உடைய அனுமன்; கணத்தில் - ஒருநொடிக்குள்; விசும்பின்மிசை - ஆகாயத்தின்கண் சென்று; கொண்டான் -சேர்ந்தான் (அந்த அனுமன்); முள்வாய் பொருப்பின் முழை - முட்செடிகள்முளைத்த மலையின் குகையை; எய்தி - அடைந்து; மிகநொய்தின் - மிகஎளிமையாக; உள்வாழ் அரக்கொடு - அந்த மலைக்குள் வாழ்கின்றபாம்புகளை எடுத்துக்கொண்டு; எழு திண் - மேலே பறந்து வந்தவலிமையான; கலுழன் ஒத்தான் - கருடனை ஒத்திருந்தான். அங்கார தாரைமலை போன்றிருந்தாள். அவள் வாய் குகை போன்றிருந்தது. அதில் நுழைந்து குடலுடன் வந்த அனுமன் மலைக் குகையில் புகுந்த பாம்புடன் மேலே வந்த கருடனை ஒத்திருந்தான். உவமையணி - அரா என்பது 'அர' எனக்குறுகி நின்றது. (83) |