4828. | ஊறுகடிதுஊறுவன ஊறில் அறம் உன்னா தேறல்இல்அரக்கர்புரி தீமை அவைதீர ஏறும்வகை எங்குளது? 'இராம'என எல்லாம் மாறும் அதின்மாறுபிறிதுஇல்' என வலித்தான். |
(அனுமன்) ஊறு - துன்பங்கள்; கடிது ஊறுவன - வேகமாக அடைகின்றன; ஊறுஇல் அறம் - அழிவில்லாத தருமத்தை; உன்னா - மதியாத; தேறல்இல் அரக்கர் - ஆராய்தல் இல்லாத அரக்கர்கள்; புரிதீமை அவைதீர - செய்கின்ற அந்ததத் தீமை நீங்க; ஏறும் வகை எங்குளது - (துன்பங்களிலிருந்து) ஏறுகின்ற வழி எங்கே இருக்கிறது? இராமஎன எல்லாம் மாறும் - இராம என்றுகூற எல்லாத் துன்பமும் (இன்பமாக) மாறும்; அதின் பிறிது மாறு இல் - அதைவிட வேறான பரிகாரம் இல்லை; என - என்று; மனத்திடை நினைத்தான் - மனத்திலே உறுதிப் படுத்திக்கொண்டான். அனுமன்,துன்பங்கள் அதிகமாக வருகின்றன. அவை நீங்க இராமநாமத்தைச் செபிக்க வேண்டும் என்று கருதினான். (88) |