4837.

மாகாரின் மின்கொடி மடக்கினர் அடுக்கி;
மீகாரம்எங்கணும் நறுந்துகள் விளக்கி
ஆகாய கங்கையினைஅங்கையினின் அள்ளிப்
பாகுஆய;செஞ்சொலவர் வீசபடு காரம்.

     செஞ்சொலவர் -செவ்வியசொற்களைப் பேசும் மகளிர்; மாகாரின் -
பெரிய மேகத்தில் உள்ள; மின்கொடி - மின்னல் கொடிகளை; மடக்கினர்
அடுக்கி -
மடக்கி ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து அடுக்கி; மீகாரம்
எங்கணும் -
உயர்ந்த மாளிகையின் எல்லாப் பகுதியினும்(உள்ள); நறுந்துகள்
விளக்கி -
நறுமணம் வீசும்மகரந்தக் குப்பைகளைத் துடைத்து (பிறகு);
அங்கையினில் ஆகாயகங் கையினை - கைகளால் ஆகாய கங்கைநீரை;
அள்ளி - முகந்து எடுத்து;வீசுபடுகாரம் - தெளிக்கின்ற திறமை; பாகுஆய
-
அழகாக உள்ளது.


     
படுகாரம் - பாகாயஎனக்கூட்டுக. படுகாரம் என்பதற்குப் பெரிய வீடு
என்று பொருள்கூறி அது அழகாக உள்ளது என்றும் கூறுவர். மேல்தளங்களில்
உள்ள குங்குமத் துகள்களை விளக்கி, ஆகாய கங்கை நீரைக் கையாலே
முகந்து தெளிக்கும் சாமர்த்தியம் அழகாயது என்பது பழைய உரை.    (3)