484.
 

அங்கதன்தன்னை அண்மி, அனுமனும் இரு கை
                           கூப்பி
'கொங்கு தங்குஅலங்கல் மார்ப ! நின்னுடைக்
                           குரக்குச் சேனை,
வெங் கதம்ஒழிந்து சால வருந்தின, வேடை ஓடி;
இங்கு, இதற்குஅளித்தல் வேண்டும், இறால் உமிழ்
                           பிரசம்' என்றான்.

     கதம் - கோபம்.இங்கே வேகம் எழுச்சி எனலாம். வேடை களைப்பு.  
                                                       (11-3)