4841.

இனையமாடங்கள் இந்திரற்கு அமைவர எடுத்த
மனையின்மாட்சிய என்னின், அச் சொல்லும்
                              மாசுண்ணும்;
அனையதாம்எனின்அரக்கர்தம் திருவுக்கும் அளவை
நினையலாம்;அன்றி உவமையும் அன்னதாய் நிற்கும்.

     இனைய மாடங்கள்-இப்படிப்பட்ட மாடிவீடுகள்; இந்திரற்கு
அமைவர -
இந்திரன் இருப்பதற்கு ஏற்ப; எடுத்த மனையின்  -
கட்டப்பெற்ற அரண்மனையின்; மாட்சிய என்னின் - சிறப்புடையன என்று
கூறினால்; அச்சொல்லும் மாசுண்ணும் - அச்சொல்லும் குற்றப்படும்;
அனையது ஆம் எனின் -
அவ்வாறு கூறுவதே குற்றம் என்றால்;
அரக்கர்தம் திருவுக்கும் -
அரக்கர்களின் செல்வத்துக்கும்; அளவை -
எல்லையை; நினையலாம் அன்றி - மனத்தாலே எண்ணலாம் அன்றி;
உவமையும் -
(அதற்குக் கூறப்படு்ம்) உவமானமும்; அன்னதாய் நிற்கும் -
'
அந்த மாட்சிய' என்னும் சொல்லைப் போல் மாசுபட்டுப் போகும்.

சொல்லுக்கு மாசாவது'ஏற்பக் கூறாமல்' ஏதோ கூறல்.          (7)