4846. | வாழும் மன்னுயிர் யாவையும் ஒருவழி வாழும் ஊழி நாயகன்திருவயிறு ஒத்துளது, இவ்வூர்; ஆழி அண்டத்தின்அருக்கன்தன் அலங்கு தேர்ப்புரவி ஏழும் அல்லன,ஈண்டுஉள குதிரைகள் எல்லாம். |
இவ்வூர் -இந்தஇலங்கை மாநகர்; வாழும் மன்னுயிர் யாவையும் - உலகில் வாழ்கின்ற உயிர்கள் எல்லாம்; ஒருவழி வாழும் - ஓரிடத்தில் கூடி வாழ்கின்ற; ஊழி நாயகன் - ஊழிமுதல்வனான திருமாலின்; திருவயிறு ஒத்துளது - திருவயிற்றை ஒத்திருக்கிறது; ஆழி அண்டத்தின் - வட்டமான அண்டத்திலுள்ள; அருக்கன்தன் - சூரியனின்; அலங்குதேர் - அசைகின்ற தேரில் பூட்டப்பெற்ற; புரவி ஏழும் அல்லன - ஏழு குதிரைகளைத் தவிர (மற்றைய); குதிரைகள் எல்லாம் - எல்லாக் குதிரைகளும்; ஈண்டுஉள - இங்கே உள்ளன. ஆழி -வட்டம் (12) |