4850.

அண்டம்முற்றவும் வீங்கு இருள் அகற்றி நின்று
                                 அகல்வான்
கண்ட அத்தனிக்கடிநகர் நெடுமனை; கதிர்கட்கு
உண்டு அவ்ஆற்றல் என்று உரைப்பரிது; ஒப்பிடின்
                                 தம்முள்
விண்டவாய்ச்சிறு மின்மினி என்னவும் விளங்கா.

     அண்டம் முற்றவும்- எல்லாஅண்டங்களிலுமுள்ள; வீங்கு இருள்
அகற்றி நின்று -
நிரம்பிய இருளைப் போக்கிநின்று; அகல்வான்கண்ட -
விரிந்த ஆகாயத்தை அளாவிய; அத்தனிக்கடிநகர் - அந்த காவலுடன் கூடிய
இலங்கையிலுள்ள; நெடுமனை  - பெரிய மாளிகை வீடுகள்; ஆற்றல் -
அந்தப் பெரும் சக்தி; கதிர்கட்கு - (பல இடங்களில் திரியும்) பன்னிரண்டு
சூரியர்களுக்கு; உண்டு என்று உரைப்பரிது - உள்ளது என்று கூறவியலாது;
ஒப்பிடின் - (கதிர்களை நகர மனையுடன்) ஒப்பிட்டுக் கூறினால்; தம்முன் -
தங்கட்கு முன்னே; விண்டவாய் - தோற்றுப் போனவாய்; சிறு - சிறிய;
மின்மினி என்னவும் -
மின்மினியைப் போலக்கூட; விளங்கா - ஒளிவிட்டு
விளங்கா.

    கவிச்சக்கரவர்த்தி புறப்பாட்டைக் கருதினார் போலும் (புறம்5)    (16))