அறுசீர் விருத்தம் 4868. | எழுந்தனர்திரிந்து வைகும் இடத்ததாய், இன்று காறும் 'கிழிந்திலதுஅண்டம்' என்னும் இதனையேகிளப்பது அல்லால் அழிந்துநின்றுஆவது என்னே ? அலருளோன் ஆதியாக, ஒழிந்த வேறுஉயிர்கள் எல்லாம் அரக்கருக்குஉறையும் போதா. |
அலர் உளோன்ஆதியாக - பிரம்மன் முதலாக;ஒழிந்த - உலகிலே தங்கியுள்ள; வேறு உயிர்கள் எல்லாம் - பல்வேறுபட்ட உயிர்கள் யாவும்; உறையும் போதா - உறையிடவும் போதாதபடியுள்ள;அரக்கருக்கு - இராக்கதர்களுக்கு; எழுந்தனர் திரிந்து வைகும் - (தாராளமாக) எழுந்து உலாவித்தங்குதற்கு; இடத்ததாய் - இடத்தைக் கொடுப்பதாய், இருந்தும்; இன்றுகாறும் - இன்றுவரை; அண்டம் - இந்தப் (பழைய) உலகமானது; கிழிந்திலது - சிதையவில்லை; என்னும் இதனையே - என்கின்ற இந்த உண்மையையே; கிளப்பது அல்லால் - விதந்து கூறி மகிழ்வதே அன்றி; அழிந்து நின்று - மனம் வருந்தி நிற்பதால்; ஆவது என் ? - உண்டாகும் பயன்தான் யாதோ ? அண்டம் -முட்டை, முட்டை மெல்லியது ஆகலின் கிழிந்திலது என்றார். பொருள்களைக்கணக்கிடுவோர் நினைவின் பொருட்டு பத்துக்குப் பிறகோ நூற்றுக்குப் பிறகோ அடையாளமாக இடும் கல் முதலியவற்றைக் குறிக்கும் சொல் 'உறை'. (34) |