4878.

கரித்தமூன்று எயிலுடைக் கணிச்சி வானவன்
எரித்தலைஅந்தணர் இழைத்த யானையை
உரித்தபேர்உரிவையால் உலகுக்கு ஓர்உறை
புரித்தனனாம்என, பொலியும் பொற்பதே.

(இருள்)

     கரித்த -கரியாக்கிய; மூன்று எயில் உடை - மூன்று
மதில்களையுடைய; கணிச்சி வானவன் - (மழுவை ஏந்திய) சிவபிரான்;
அந்தணர் -
(தாருகவனத்தைச் சேர்ந்த) முனிவர்கள்; எரித்தலை இழைத்த -
வேள்வியின் கண்ணே படைத்த; யானையை - யானையை; உரித்த -
உரித்தெடுத்த; பேர் உரிவையால் - பெரிய தோலினாலே;உலகுக்கு - இந்த
உலகத்துக்கு; ஓர் உறை - ஒரே உறையை;புரித்தனன் ஆம் என -
அமைத்தான் ஆம் என்று கூறும்படி; பொலியும் -தெளிவான; பொற்பது -
ஒப்புமை உடையது.

    எரித்த -எயிலுடைக் கணிச்சிவானவன் என்னும் தொடர்
வடமொழியைப் பின்பற்றி அமைந்தது. அருங்கேடன் என்பது போல் (விளக்கம்
- திருக்குறள் - நுண்பொருள் மாலை 46 - பக்). புரிந்தனன் நான்முகன்
என்பது நல்ல பாடம் - பிரான் உரித்த தோல் நான்முகனால். பொற்பு - உவம
உருபு - பொற்ப போல் (தொல் உவம 297) ஏ - அசை.            (44)