இருளில்அரக்கர் இயங்கல் 

4881. 

அவ்வழிஅவ்இருள் பரந்த ஆயிடை
எவ்வழிமருங்கினும் அரக்கர் எய்தினார்;
செவ்வழிமந்திரத் திசையர் ஆகையால்
வெவ்வழிஇருள்தர, மிதித்து, மீச்செல்வார்.

     அவ்வழி -அவ்விடத்தில்; அவ் இருள் - (விடம் போலவும் வெண்மைநீங்கிய புகழ் போலவும் உள்ள) அந்த இருளானது; பரந்த
ஆயிடை -
பரவியஅப்பொழுது; அரக்கர் - இராக்கதர்கள்; செவ் வழி -
செம்மையானமுறையின்; மந்திரத் திசையர் - மந்திர ஆற்றலால் நினைத்த
திசையில்செல்லவல்லவர்; ஆகையால் - ஆதலால்; வெவ்வழி - கொடிய
வழியை.இருள்தர - இருளானது காண்பிக்க; மிதித்து - (அதைப்படியாக்
கொண்டு)மிதித்துக் கொண்டு; மீச் செல்வார் - மேல்நோக்கிப்
போகின்றவராய்;எவ்வழி மருங்கினும் - எந்த வழியிலும் எல்லாப்பக்கங்களிலும்; எய்தினார் -போயினார்.

    இருள் பரவியசமயத்தில் - அரக்கர் - மந்திரவன்மையால் இருளை
மிதித்துச் சென்றனர். அரக்கரை நிசிசரர் என்பர் - அது இங்கு கற்பனை
ஆற்றலால் பேசப்படுகிறது. மனிதர்களுக்குத் தடையான இருள்
அரக்கர்களுக்குப் படியாயிற்று.                              (47)