4887. | வந்தனன்இராகவன் தூதன்; வாழ்ந்தனன் எந்தையேஇந்திரன் ஆம் என்று ஏமுறா அந்தம்இல்கீழ்த்திசை அளகவாள் நுதல் சுந்தரிமுகம்எனப் பொலிந்து தோன்றிற்றே. |
(முளைத்த இந்து) இராகவன் தூதன் -இராமபிரானுடைய தூதனாகிய அனுமன்; வந்தனன்- இலங்கைக்கு வந்துவிட்டான் (அதனால்); இந்திரனாம் - இந்திரனாகிய;எந்தையே - என்னுடைய தந்தையே; வாழ்ந்தனன் - நல்வாழ்வுபெற்றுவிட்டான்; என்று - என்று நினைத்து; ஏம்உறா - மகிழ்ச்சியடைந்து;அந்தம் இல் - எல்லை இல்லாத; கீழ்த்திசை - கிழக்குத் திசையாகிய;அளகவாள் நுதல் சுந்தரி - சுருள்குழல் அசையும் நெற்றியையுடையசுந்தரியின்; முகம் என - முகம்போல; பொலிந்து தோன்றிற்று -வெளிப்பட்டது. அனுமன்இலங்கைக்கு வந்ததால் இந்திரன் வாழ்வுபெறுவான், என்று கிழக்குத் திசைப் பெண்ணின் முகம் போலச் சந்திரன் தோன்றினான். சந்திரன் ஆரம்பத்தில் அறம்போல முளைத்தான் இப்போது அவன் சுந்தரியின் முகம்போலப் பொலிந்தான். மனைவி கணவனைத் தந்தைஎன்று கூறாள், என்று கருதி 'எந்தை' என்பதற்கு'தலைவன்' என்று உரை கூறினார்கள். சங்க காலத் தலைவி, தலைவனை,அன்னையும் அத்தனும் அல்லரோ' என்று பேசினாள் (குறுந்-93). சுந்தரி -இந்திராணியையும் குறிக்கும். 'கிழக்குத்திசைப் பெண்ணை - இந்திரன் மனைவி'என்றான் கவிச்சக்கரவர்த்தி. அளகம் - முன்நெற்றி மயிர். அது சிறிதேவளர்ந்து நெற்றியில் அசையும்' மஞ்சொக்கும் அளக ஓதி' (கம்ப. 3136). இனிஇந்திரனே சுவாமி ஆவான் எனச் சந்தோஷத்துடன் சந்திரன் எழுந்தது. இவ்உரையின்படி' ஏமுற்று என்ற எச்சம் இந்துவைச் சாரும். சந்திரன் இந்திரன்எந்தையென்று போற்றுகிறான். (53) |