4903. | சூலம்,மழு,வாளொடு,அயில், தோமரம், உலக்கை, கால வரிவில்,பகழி, கப்பணம், முசுண்டி, கோல், கணையும்,நேமி, குலிசம், சுரிகை, குந்தம் பாலம் முதல்ஆயுதம் வலத்தினர் பரித்தார். |
வலத்தினர் -ஆற்றல்மிக்க அரக்கர்கள்; சூலம் மழு வாளொடு - சூலம், மழு, வாள்; அயில் தோமரம் உலக்கை - வேல், ஈட்டி, உலக்கை; கால வரிவில் பகழி - யமனைப் போன்ற வில் அம்பு; கப்பணம் முசுண்டி -இரும்புநெரிஞ்சி, முசுண்டி; கோல் கணையம் நேமி - தடி, வளைதடி, சக்கரம்; குலிசம், சுரிகை, குந்தம் - வச்சிரம், உடைவாள், கைவேல்; பாலம் - பிண்டிபாலம்; முதல் ஆயுதம் - முதலான ஆயுதங்களை; பரித்தார் - தாங்கி நின்றார்கள். ஆற்றல்மிக்கஅரக்கர்கள் சூலம் முதலான ஆயுதங்களை ஏந்தி நின்றனர். சூலம் - முத்தலைவேல். மழு - கோடாலி. இப்பாடலில் உள்ள ஒடுவைமூன்றனுருபாக் கொண்டதால் எல்லாவற்றிலும் உம்மையை விரித்து உரைகூறினர். உம்மை விரித்தால் முதல் என்பது வேண்டா. அடியார்க்கு நல்லார்,கொடித்தார் வேந்தரொடு எனும் தொடரில் உள்ள (சிலம்பு 5-182) ஒடுவைஅசையாக்கினும் அமையும் என்றார். ஈண்டும் அது. (69) |