4913. | அஞ்சுவணத்தின் ஆடை உடுத்தாள்; அரவு எல்லாம் அஞ்சு உவணத்தின்வேகம் மிகுத்தாள் அருள் இல்லாள் அம் சுவணத்தின்உத்தரியத்தாள் அலையாரும் அம்சு வள்நத்தின் முத்து ஒளிர் ஆரத்து அணி கொண்டாள்;+ |
அஞ்சு வணத்தின்- ஐந்துநிறங்களைப் பெற்ற; ஆடை உடுத்தாள் -சேலையை அணிந்தவளும்; அரவு எல்லாம் அஞ்சும் - எல்லாப் பாம்புகளும்பயப்படும்படியான; உவணத்தின் - கருடனைப் போல; வேகம் மிகுத்தாள் -மிக்க வேகம் உடையவளும்; அருள் இல்லாள் - கருணையற்றவளும்; அம் - அழகிய; சுவணத்தின் உத்தரியத்தாள் - பொன் இழையால் அமையப்பெற்ற மேலாக்கையுடையவளும்; அம் - நீர் நிரம்பிய; சுவள் நத்தின் -அழகாக ஒளி பொருந்திய சங்கிற்பிறந்த; முத்து ஒளிர் - முத்து விளங்கும்;ஆரத்து அணி கொண்டாள் - ஆரங்களால் அழகு பெற்றவளும். சுவணத்தின் முத்து- சுவணதேய முத்து என்று வரத நஞ்சையப்பர் கூறுவார் - சுவர்ண தேயம், இலங்கை போலும். (79) |