4925. | அடியாமுன்னம் அம்கை அனைத்தும் ஒருகையால் பிடியா 'என்னே?பெண்இவள்; கொல்லின் பிழை'என்னா, ஒடியா நெஞ்சத்துஓர்அடி கொண்டான், உயிரோடும் இடியேறு உண்டமால்வரைபோல், மண்ணிடை வீழ்ந்தாள். |
அடியாமுன்னம்- அவள் அடிப்பதற்கு முன்னே; அம்கை அனைத்தும் - அவளுடைய எட்டுக்கைகளையும்; ஒரு கையால் பிடியா - ஒரு கையாற் பற்றிக் கொண்டு; இவள் - இந்தப் பகைத்தி; பெண் - பெண்ணாக உள்ளாள் (ஆதலால்); என் - யான் எப்படிப் போரிடுவேன்; கொல்லின் - கொன்றால்; பிழை - பாபமாகும்; என்னா- என்றுகருதி; ஓடியா-மனம் இரங்கி; நெஞ்சத்து - அவள் மார்பில் (மற்றொரு கையால்); இடியேறு உண்ட - பெருத்த இடியால் தாக்கப்பெற்ற; மால்வரைபோல் - பெருமலைபோல்; உயிரோடும் - உயிருடன்; மண் இடை வீழ்ந்தாள் - பூமியிலே சாய்ந்தாள். (91) |