4929. | அன்னதேமுடிந்தது ஐய! 'அறம்வெல்லும் பாவம் தோற்கும்' என்னும் ஈதுஇயம்ப வேண்டும் தகையதோ ?இனி மற்று உன்னால், உன்னிய எல்லாம்முற்றும், உனக்கும்முற்றாதது உண்டோ ? பொன்நகர் புகுதிஎன்னாப் புகழ்ந்து அவள்இறைஞ்சிப் போனாள். |
ஐய - ஐயனே!;அன்னதே - பிரம்மனின் சொல்லே; முடிந்தது - நிறைவேறியது; அறம் வெல்லும் பாவம் தோற்கும் - தர்மம் வெல்லும் பாவம் தோல்வியடையும்; என்னும் ஈது - என்று பேசப்படும் சத்திய வசனம்; இயம்ப - ஒருவர் மற்றவர் எடுத்துக் கூறுதலை; வேண்டும் தகையதோ - அவாவி நிற்கும் எளிய நிலையிலிருப்பதா ?; இனி - இனிமேல்; உன்னால் - உன்னாலே; உன்னிய எல்லாம் - நினைக்கப்படும் எல்லாச் செயல்களும்; முற்றும் - நிறைவேறும்; உனக்கும் - உன்னாலேயும்; முற்றாதது - செய்ய முடியாத செயல்; உண்டோ - உள்ளதா ?; பொன் நகர் புகுதி - பொன்மயமான இலங்கைக்குள் புகுக; என்னா - என்று; புகழ்ந்தவள் - அனுமனைப் புகழ்ந்த இலங்கைத் தேவி; இறைஞ்சிப் போனாள் - வணங்கிச் சென்றாள். (95) |