4943.

விற்படர்பவளப் பாதத்து
     அலத்தகம்எழுதி, மேனி
பொற்பு அளவு இல்லா
     வாசப்புனைநறுங் கலவை பூசி,
அற்புத வடிக்கண்வாளிக்கு
     அஞ்சனம்எழுதி, அந்தில்
கற்பகம்கொடுப்ப வாங்கி
    கலன்தெரிந்து அணிகின்றாரை-

     படர்வில் -பரவியஒளியைப் பெற்ற; பவளப் பாதத்து - பவளம்
போன்ற பாதங்களில்; அலத்தகம் எழுதி - செம்பஞ்சுக் குழம்பை
அலங்கரித்துப் பூசி; அளவு இல்லா - அளவு கடந்த; பொற்பு - பொலிவைப்
பெற்ற; வாசம் - மணமுடைய; புனை - கற்பூரம் முதலானவை சேர்க்கப்பெற்ற;
நறுங்கலவை - நல்ல கலவைச் சந்தனத்தை; மேனி பூசி - மேனியில்
அணிந்து (பிறகு); அற்புத - அதிசயமான; வடி - கூர்மையான; கண்
வாளிக்கு -
கண்களாகிய அம்புக்கு; அஞ்சனம் எழுதி - மையிட்டு; அம்
பொன் -
அழகிய பொன்மயமான; கற்பகம் - கற்பக மரம்; கலன்கொடுக்க -
ஆபரணங்களை வழங்க (அவற்றுள்); தெரிந்து - தமக்கு ஏற்றவற்றை அறிந்து;
வாங்கி - பெற்று; அணிகின்றாரை - அணிபவர்களாகிய அரக்கப்
பெண்டிரையும்.

     வாங்கி என்றான்மரத்திற்குக் கீழே தம் கையைத் தாழ்த்தாமல் எடுத்துக்
கொண்டமை நோக்கி.                                     (109)