4945.

உள்ளுடைமயக்கால் உண்கண்
     சிவந்து,வாய்வெண்மை ஊறி,
துள்இடைப் புருவம்கோட்டித்
     துடிப்ப,வேர்பொடிப்ப, தூய
வெள்ளிடை மருங்குலார்தம்
     மதிமுகம்வேறு ஒன்று ஆகிக்,
கள்ளிடைத்தோன்ற நோக்கிக்
     கணவரைக்கவல்கின் றாரை-

     தூய - (மேகம் முதலானவைஇல்லாத) சுத்தமான; வெள்ளிடை -
வெட்ட வெளி போன்ற; மருங்குலார் - இடையை உடைய மகளிர்; தம்
மதிமுகம் -
தம்முடைய சந்திரனை ஒத்த முகம்; வேறு ஒன்றாகி - பிறிதொருவடிவமாகி; கள்ளிடை தோன்ற - கள்ளின் சாடியிலே தெரிய;
நோக்கி -அதைப் பார்த்து (அதனால்); உள் உடை மயக்கால் - மனம்
சிதைந்ததால்உண்டாம் மயக்கத்தால்; உண்கண் சிவந்து - மையுண்ட
கண்கள்சிவக்கப்பெற்று; வாய்வெண்மை ஊறி - வாயில் வெண்ணிறம் பரவி;
துள் -துள்ளுகின்ற; புருவம் - புருவம்; இடை - நடுவில்; கோட்டி துடிப்ப
-
வளைந்து துடிக்க; வேர் பொடிப்ப - வியர்வை அரும்பித் தோன்ற;

கணவரை -
(தன்னைத் தேடும்)கணவரை; கனல்கின்றாரை - சீறுகின்ற
மகளிரையும். இப் பாடலைப்பின்பற்றி பரஞ்சோதியார் அமைத்த பாடல் -
திருவிளையாடற் புராணம் தருமிக்குப் பொற்கிழியளித்த படலத்தில் (75)
காண்க. புலவர் புராணம், பரஞ்சோதி... கம்பன் தனை நம்பிக்
கள்ளுண்டாட்டுரைத்தது என்று கூறும்.                           (111)