4959. | வானவர்மகளிர் கால்வருட, மாமதி ஆனனம் கண்டமண்டபத்துள், ஆய்கதிர்க் கால்நகு காந்தம்மீக்கான்ற காமர்நீர்த் தூநிற நறுந்துளிமுகத்தில் தோற்றவே. |
வானவர் மகளிர்- தேவமகளிர்; கால் வருட - கால்களைப் பிடித்து விடவும்; மாமதி - நிறைந்த பூரண சந்திரனானவன்; ஆனனம் கண்ட - தன் முகத்தைப் பார்த்துக் கொள்ளும்; மண்டபத்துள் - மண்டபத்தின்கண்; ஆய்கதிர் - மென்மையான ஒளி; நகு - விளக்கம் பெற்ற; காந்தக் கால் - காந்தத்தால் அமைத்த தூண்; மீ கான்ற - மேலே வெளிப்படுத்திய; காமர் - இனிமை யானதும்; தூ - தூய்மையானதும்; நிறம் - சிறப்பு மிக்கதும் (ஆன); நறும் நீர்த்துளி - நறுமணம் மிக்க நீர்த்துளி; முகத்தில் - முகத்திலே; தூற்ற - மெல்ல வீசப் பெறவும். சந்திரன் தன்முகஅழகைப் பார்க்கும் மண்டபம். சந்திரன் பார்வை பட்டதால் காந்தத் தூண்கள் நறுந்துளி தூற்றின. (125) |