496.

வாய் வழிக்குருதி சோர, மணிக் கையால் மலங்க
                           மோதி,
'போய் மொழி, கதிரோன்மைந்தற்கு' என்று, அவன்
                           தன்னைப்போக்கி,
தீ எழும் வெகுளிபொங்க, 'மற்று அவன்
                            சேனைதன்னை,
காய் கனல்பொழியும் கையால் குத்துதிர், கட்டி'
                            என்றான்.

     ததிமுகனை அடித்துசுக்கிரீவன்  பால் சென்று சொல்க என்று அங்கதன்அனுப்புதல்.                                  (11-15)