4962.

பகைஎன, மதியினைப் பகுத்து, பாடுஉற
அகைஇல்பேழ்வாய் மடுத்து, அருந்துவான்எனப்,
புகையொடுமுழங்குபேர் உயிர்ப்புப் பொங்கிய
நகைஇலா முழுமுகத்துஎயிறு நாறவே.

     பகைஎன - பகை என்று கருதி;மதியினை - பூரண சந்திரனை;
பகுத்து -
இரண்டு கூறு படுத்தி; அகைஇல் - வருத்தம் இல்லாத; பேழ்வாய்
-
பெரியவாயின்; பாடு - இரண்டு பக்கத்திலும்; உற மடுத்து - நன்றாக
உட்கொண்டு; அருந்துவான் என - உண்பவனைப் போல; புகையொடு -
புகையும்; முழங்குபேர் உயிர்ப்பு - முழங்குகின்ற பெருமூச்சு; பொங்கிய -
மிக்கிருக்கின்ற; நகை இலா - புன்னகையில்லாத; முழுமுகத்து -
பெரியமுகத்திலே; எயிறு நாற - பற்கள் தோன்றவும்.

     சந்திரனை இரண்டுகூறுபடுத்தி உண்பவனைப் போல இரண்டு
பக்கங்களிலும் வெண்மையான பற்கள் தோன்றவும். புகையும், உயிர்ப்பும்
உள்ள முகம் நாற - வெளிப்பட்டுத்தெரிய அகையில் - வருத்தம் இல்லாத.
உணவு இல்லாமையால் வருத்த மடையாத வாய். அகை - வருத்தம்.
அகையேல் அமர் கோழி (சிந்த 1524)                           (128)