497.

பிடித்தனர்;கொடிகள் தம்மால் பிணித்தனர்; பின்னும்
                         முன்னும்
இடித்தனர், அசனிஅஞ்ச, எறுழ் வலிக் கரங்கள்
                          ஓச்சி;
துடித்தனர்,உடலம் சோர்ந்தார்; 'சொல்லும் போய்
                          நீரும்' என்னா,
விடுத்தனன்,வாலி மைந்தன்; விரைவினால் போன
                          வேலை,

     ததிமுகன்சேனையினரை அங்கதன் சேனையைச் சேர்ந்தவர்
செய்தபடியைக் கூறியது.                                  (11-16)