4980. | தனிக்கடக்களிறுஎன ஒரு துணையிலான் தாய, பனிக்கடல்பெருங் கடவுள்தன் பரிபவம் துடைப்பான் இனி கடப்ப அரிதுஏழ்கடல் கிடந்தது' என்று இசைத்தான்- கனிக்கு அடல்கதிர்தொடர்ந்தவன், அகழியைக் கண்டான் |
ஒரு துணையிலான் -ஒரு துணையையும் வேண்டாத வீரன்; தனி - ஒப்பற்ற; கட - மதம்பிடித்த; களிறு என - யானை போல; தாய -கடக்கப் பெற்ற; பெரும் - பெரிய; பனி - குளிர்ந்த; கடல் கடவுள்தன் - கடலின் தெய்வத்தின்; பரிபவம் - அவமானத்தை; துடைப்பான் - துடைக்கும்பொருட்டு; ஏழ்கடல் கிடந்தது - ஏழு கடல் தடையாகக் கிடக்கிறது; இனி - இப்போது; கடப்ப அரிது என்று இசைத்தான் - தாண்டிச் செல்வது கடினம் என்று இசைத்து; கனிக்கு - உண்ணும் கனியின் பொருட்டாக; அடல் கதிர் - வலிமைமிக்க சூரியனை; தொடர்ந்தவன் - பின்பற்றிச் சென்ற அனுமன்; அகழியைக் கண்டான் - (இராவணனின் அரண்மனை) அகழியைப் பார்த்தான். கடல், அனுமன்கடந்ததால் உண்டான கடல் தெய்வத்தின் அவமானத்தைத் துடைக்க எண்ணுகிறது. அனுமன் ஒரு கடலைக் கடந்ததனாலே, அந்த கடலின் இறைவன் தன்பழி ஒழிக்க, ஏழு கடலும் கூட்டி வந்து கிடந்தது போன்ற அகழியைக் கனிக்காக ஆதித்தனைத் தொடர்ந்தவன் கண்டான் என்பது பழைய உரை (அடை-பதி) (146) |