4993.

இறங்கின,நிறம்கொள்பரி, ஏமம்உற எங்கும்
கறங்கின,மறம்கொள் எயில் காவலர் துடிக்கண்;
பிறங்கு இணர்நறுங்குழலர் அன்பர் பிரியாதோர்
உறங்கினர்;பிணங்கி எதிர் ஊடினவர் அல்லார்.*

     நிறம் கொள்பரி- பலநிறங்களைக் கொண்ட குதிரைகள்; இறங்கின -
தலை சாய்த்து உறங்கின; மறம்கொள் - வீரத்தைப் பெற்ற; எயில் காவலர் -
மதிலைப் பாதுகாப்பவர்களின்; துடிக்கண் - வாச்சியங்களின் கண்கள்;
ஏமம்உறஎங்கும் - பாதுகாப்பு உண்டாக எல்லா இடங்களிலும்; கறங்கின -
ஒலித்தன; பிறங்கிணர் - விளங்குகின்ற பூங்கொத்துகளை உடைய;
நறுங்குழலர் - மணம்மிக்க கூந்தலையுடைய மகளிரும்; பிணங்கி - மாறுபாடு
கொண்டு; எதிர் - கணவனின் பணிமொழிக்கு எதிராக; ஊடினவர் - ஊடல்
கொண்டவர்; அல்லார் - அல்லாத மற்றைய மகளிரும்; உறங்கினர் -
தூங்கினார்கள்.

     பரிகள்உறங்கின. யாமக் காவலரின் வாக்கியங்கள் ஒலித்தன. மகளிர்
உறங்கினர். பிறங்கின நறுங்குழலர் என்றது மணமாகாத கன்னிப் பெண்களை -
மணமகளிர்கூந்தல் பிறங்காமை அறிக. தாரும் மாலையும் மயங்குங்கால்
கூந்தல் பிறங்குங்கொல் கிழவோன் பணிவுக்கெதிரில் பிணங்குதல் எதிர்
ஊடுதல் என்று பேசப்பட்டது.                                  (159)