4998. | இளக்கர்இழுது எஞ்ச விழும்எண்அரு விளக்கைத் துளக்கியதுதென்றல், பகைசோர உயர்வோரின் அளக்கரொடுஅளக்கரிய ஆசையுற வீசா, விளக்குஇனம்விளக்குமணி மெய்உறு விளக்கம்.* |
பகை சோர -பகைவர்கள் தளர்ச்சியடைய; உயர்வோரின் - சிறப்பை அடைபவரைப் போல; இளக்கர் - இளகும் தன்மையுடைய; இழுது எஞ்ச - நெய்யானது குறைய; விழும் - ஒளி குறைந்த; எண் அரு விளக்கை - அளவற்ற விளக்குகளை; தென்றல் - தென்றல் காற்று; துளக்கியது - அணைத்துவிட்டது; அப்போது மெய் - மகளிரின் மேனியிலும்; உறுமணி - அம்மேனியில் பொருந்திய ஆபரணங்களிலும் (உள்ள); விளக்கம் - ஒளிகள்; அளக்கஅரிய - அளவிடமுடியாத; அளக்கரொடு - கடலிலும்; ஆசை - திசைகளிலும்; உற - மிகுதியாக; வீசா - வீசி; விளக்கு இனம் - விளக்கைப் போல; விளக்கும் - பிரகாசிக்கும். ஆடவர்களுக்கும்பெண்களுக்கும் கலவியிலே கடலுக்கு மிகுதியான ஆசை பொருந்தும்படிக்கு எரிந்த விளக்கைக் காற்று அவித்தவுடனே அந்த பெண்கள் அழகிய மேனியின் ஒளியாகிய விளக்கு பரந்தது என்னும் விளக்கம் கம்பராமாயணக் கருப்பொருள் ஏட்டில் உள்ளது (அண்ணாமலைபதி) 'இருள் துரப்பன, தீ விளக்கமோ? மணி விளக்கு; அல்லன மகளிர் மேனியே' (கம்ப 143.) (164) |