5000.

ஆயபொழுது,அம் மதில் அகத்து அரசர் வைகும்
தூயதெரு ஒன்றொடுஒருகோடி துருவிப் போய்,
தீயவன் இருக்கைஅயல், செய்த அகழ் இஞ்சி
மேயது கடந்தனன்-
 வினைப்பகையை வென்றான்.

     ஆயபொழுது -(இலங்கைஉறக்கத்திலிருந்த) அப்பொழுது; வினைப்
பகையை வென்றான் -
வினையாகிய பகையை வென்ற அனுமன்; அம்
மதில் அகத்து -
அந்த மதிலுக்குள்ளே;  அரசர் வைகும் - அரசர்கள்
தங்கியிருக்கும்; தூய - தூய்மையான; ஒன்றொடு ஒரு கோடி தெரு -
இரண்டு கோடித் தெருக்களை; துருவிப் போய் - தேடி அப்புறத்தே சென்று;
தீயவன் -
இராவணனின்; இருக்கை அயல் செய்த -  அரண்மனையின்
பக்கலில் அமைக்கப்பட்ட; மேயது - பொருந்திய; அகழ் இஞ்சி -
அகழியையும் மதிலையும்; கடந்தனன் - தாண்டினான்.

     அனுமன்,அரசர்கள் இருக்கும் இரண்டு கோடித் தெருக்களைக் கடந்து
இராவணனின் அரண்மனையைச் சார்ந்த அகழியையும் மதிலையும் கடந்தான்.
                                                    (166)