5005.

அள்ளல் வெஞ்சர மாரனை அஞ்சியோ ?
மெள்ள இன்கனவின் பயன் வேண்டியோ ?
கள்ளம் என்கொல் ? அறிந்திலம் - கண் முகிழ்த்து
உள்ளம் இன்றி,உறங்குகின்றார் சிலர்.

     சிலர் - சில யட்சமகளிர்; அள்ளல் - சேற்றில் தோன்றிய; வெம்சர
-
கொடிய மலரம்புகளை உடைய; மாரனை - மன்மதனுக்கு; அஞ்சியோ -
பயப்பட்டோ;
மெள்ள - மெதுவாக;இன்கனவின் - இனிமையான கனவின்
பயனை;வேண்டியோ - விரும்பியோ ? கள்ளம் - உட்கருத்து; என்கொல்
-
யாதோ? அறிந்திலம் -  யாம் அறிந்தோம் இல்லை; கண் முகிழ்த்து -
கண்களைமூடியபடி; உள்ளம் இன்றி - ஊக்கம் இல்லாமல்; உறங்குகின்றார்
-
தூங்குகின்றனர்.

     கள்ளம் - உட்கருத்து. பிறர் அறியாமல் உள் இருத்தலின் கள்ளம் என்று
கூறப்பெற்றது.                                               (171)