5007. | 'ஆவது ஒன்றுஅருளாய்; எனது ஆவியைக் கூவு கின்றிலை; கூறலை சென்று' எனா பாவை பேசுவபோல், கண் பனிப்பு உற பூவை யோடும்புலம்புகின்றார் சிலர். |
சிலர் -வேறு சில யட்ச மகளிர்; கண் - கண்கள்; பனிப்பு உற - கண்ணீர் சிந்த; பூவையோடும் - நாகணவாயப் பறவைகளுடன்; பாவை பேசுவபோல் - பதுமை பேசுவதைப் போல; ஆவது ஒன்று - எனக்குத் தகுதியான ஒரு சொல்லையும்; அருளாய் - பேசமாட்டாய்; எனது ஆவியை - (பிரிந்து சென்ற) என் உயிரை; கூவுகின்றிலை - அழைத்து வந்தாயில்லை; சென்று கூறலை - (இப்போதும் என் நிலைமையை) சென்று கூறவில்லை; எனா - என்று; புலம்புகின்றார் - கவலைப்படுகின்றனர். (173) |