5010.

வாளின் ஆற்றிய கற்பக வல்லியர்,
தோளின்நாற்றிய தூங்கு அமளித்துயில்,
நாளினால்செவியில் புகும்நாம யாழ்த்
தேளினால்திகைப்பு எய்துகின்றார் சிலர்.*

     சிலர் - சில யட்சமகளிர்; வாளின் - ஒளிகளாலே; ஆற்றிய -
செய்யப்பெற்ற; கற்பகவல்லியர் - கற்பகக் கொடிபோன்ற சேடியர்கள்;
தோளின் -
கைகளால்; நாற்றிய - தொங்கவிடப்பட்ட;
தூங்கு அமளி -
தொங்கும்படுக்கையில்; துயில் நாளினால் - உறங்கும் சமயத்தில்; செவியில்
புகும் -
காதுகளிற் புகுந்த; நாம யாழ்த் தேளினால் - அசசந் தரும்
யாழாகிய தேளால்; திகைப்பு எய்துகின்றார் - கலக்கம் அடைகின்றனர்.

     திகைத்தல் -செயலற்றிருத்தல் என்றும் கூறலாம். யாழ் என்றது யாழின்
இசையை. செவியிற் புகுவது இசையே, யாழன்று. தூங்கு அமளி - தூங்கு
கட்டில். இனியர் (பாலைக்கலி 12) துலங்கு ஊர்தி - தூங்கு கட்டில் என்று
வரைந்தார். நாமம் - அச்சம். தோளின் - டோளியைப் போல் என்று உரை
வகுத்தவரும் உளர். (டோள் - அசையும் பல்லக்கு) நாளினால் என்பதில்
உள்ள 'ஆல்' இடப்பொருள் தந்தது. புள்ளினம் விதி சேரும் பொழுதினால்
(கலித் நெய்தல் 6)
                                      (176)