'இமைத்தல்முன், "வாலி சேய், எழில் கொள் யாக்கையைச் சமைத்தி" என்றுஎறிதர, புறங்கையால் தகைந்து, அமைத்தரு கனல்என அழன்று, எற் பற்றியே குமைத்து, உயிர்பதைப்ப, "நீ கூறு போய்" என்றான்.
அங்கதன் என்னை அடித்து'நீ போய் கூறு' என அனுப்பினான் என்றுததிமுகன் கூறல். (19-5)