'இன்று நான்இட்ட பாடு இயம்ப முற்றுமோ ?' என்று உடல்நடுக்கமோடு இசைக்கும் ஏல்வையில், அன்று அவன்உரைத்தல் கேட்டு, அருக்கன் மைந்தனும் ஒன்றியசிந்தையில் உணர்ந்திட்டான் அரோ.
ததிமுகன்கூற்றால் சுக்ரீவன் உணர்தல். (19-6)