5064.

வல்அரக்கன் தனைப்பற்றி
     வாயாறுகுருதிஉகக்
கல் அரக்கும்கரதலத்தால்
     காட்டுஎன்று காண்கேனோ ?
எல் அரக்கும்அயில் நுதிவேல்
     இராவணனும்இவ் ஊரும்
மெல் அரக்கின்உருகிஉக
    வெந்தழலால் வேய்கேனோ ?

     கல் - மலைகளைக்கூட;அரக்கும் - பொடியாக்கும்; கரதலத்தால் -
(என்னுடைய) கைகளால்; வல் - வலிமை உடைய; அரக்கன்தனை -
இராவணனை; வாய் - வாய்வழியாக; குருதிஆறுஉக - இரத்த நதி
பெருக்கெடுக்க; பற்றி - இறுக்கிப் பிடித்து; காட்டு என்று - பிராட்டியைக்
காட்டுக என்று; காண்கேனோ -  காண்பேனோ (அல்லது); எல் -
சூரியனையே; அரக்கும் - வருத்துகின்ற; அயில் -  கூர்மையான; நுதிவேல்
-
நுனியை உடைய வேலேந்திய; இராவணனும் - இராவணனும்; இவ்வூரும் -
இந்த இலங்கையும்; மெல் அரக்கின் - மென்மையான அரக்கைப்போல;

உருகிவிழ - உருகிவிழும்படி;வெந்தழலால் - கொடிய நெருப்பினாலே (இந்த
ஊரை); வேய்கேனோ -  மூடுவேனோ (எதைச் செய்வது).         (230)