507.

ஏம்பலோடுஎழுந்து நின்று, இரவி கான்முளை,
பாம்பு அணைஅமலனை வணங்கி, "பைந் தொடி
மேம்படுகற்பினள்" என்னும் மெய்ம்மையைத்
தாம்புகன்றிட்டது, இச் சலம்' என்று ஓதினான்.

     ததிமுகனுக்கும் வானரவீரர்க்கும் நிகழ்ந்த இச்சண்டை 'பிராட்டி
மேம்படு கற்பினள்' என்பதை நமக்குத் தெரிவிக்கிறது என்று சுக்ரீவன்
இராமனிடம் கூறல்.                                       (19-7)