5105. | 'உன் நிறம் பசப்பு அற, உயிர் உயிர்ப்புற, இன் நிறத் தேன்இசை, இனிய நண்பினால்,- மின் நிறமருங்குலாய் !- செவியில், மெல்லென, பொன் நிறத்தும்பி வந்து, ஊதிப் போயதால். |
நிறம் மின்மருங்குலாய் - நன்னிறம் பெற்றமின்போன்ற இடையை உடைய பிராட்டியே; உன் பசப்பு நிறம் அற - உன்னுடைய மேனியில் உள்ளபசலை நிறம் அற்றுப் போகவும்; உயிர் - உன்னுடைய உயிரானது; உயிர்ப்புஉற - செழிப்படையவும்; பொன் நிறத் தும்பி - பொன் போன்ற மேனியைப்பெற்ற வண்டு; மெல்லென வந்து - மெதுவாக உன் பக்கத்திலே வந்து;செவியில் - உன்னுடைய காதுகளில்; இன்நிறத் தேன் இசை - இனிமையானதேன் போன்ற இசையை; இனிய நண்பினால் - நன்மையை விளைவிக்கும்அன்புடன்; ஊதிப் போயது - இசைத்துச் சென்றது. பசப்பு - பசலை.கணவனைப் பிரிந்தாரின் உடல் நிறம் மாறுவதைப் 'பசலை' என்பர். ஊதுதல் - இசைத்தல். ஒரு செய்தியைப் பிறரறியாமல் கூறுவதை ஊதுதல் என்னும் வழக்கு அன்றும் இருந்தது போலும். (37) |