5106. | 'ஆயது தேரின், உன் ஆவி நாயகன் ஏயது தூது வந்துஎதிரும் என்னுமால்; தீயது தீயவர்க்குஎய்தல் திண்ணம்; என் வாயது கேள்' என,மறித்தும் கூறுவாள். |
தேரின் -ஆராய்ந்தால்; ஆயது - அந்த வண்டு; உன் ஆவி நாயகன்- உன்னுடைய உயிர் போன்ற தலைவனால்; ஏயது தூது - ஏவப் பெற்றதூதுவன்; வந்து எதிரும் - வந்து சந்திப்பான்; என்னும் - என்று தெரிவிக்கும்; தீயவர்க்கு - கொடியவர்களுக்கு; தீயது எய்தல் - தீமை வருவது; திண்ணம் - உறுதியாகும் (அதை உறுதிப்படுத்த); என் வாயது - என்பால் நிகழ்ந்த அனுபவத்தை; கேள் என - கேட்பாயாக! என்று; மறித்தும் கூறுவாள் - மேலும் சொல்லத் தொடங்கினாள். அந்த வண்டு உன்உயிர்த்தலைவனால் ஏவப்பெற்ற தூதுவன் உன்னைச் சந்திப்பான் என்பதை அறிவிக்கும் என்றாள். ஆயது - வெறும் சுட்டாய் உள்ளது. 'ஆயது அறிந்தனர்' (கம்ப. 412) (38) |