5110.

'ஆண் தகைஇராவணன் வளர்க்கும் அவ் அனல்
ஈண்டில;பிறந்தவால், இனம் கொள் செஞ் சிதல்;
தூண்ட அரு மணிவிளக்கு அழலும் தொல் மனை
கீண்டதால், வானஏறு எறிய, கீழை நாள்.

     ஆண்டகை இராவணன்- ஆண்மையுடைய இராவணன்; வளர்க்கும்
அவ் அனல் -
வளர்க்கின்ற வேள்விக் கனல்; ஈண்டில - வளரவில்லை
(வேள்விக்குண்டத்தில்); இனம் கொள் செஞ்சிதல் - கூட்டமான
செங்கரையான்கள்; பிறந்த - உற்பத்தியாகிவிட்டன; தூண்ட அரு மணி
விளக்கு -
தூண்டுதலை வேண்டாத தீபங்கள்; அழலும் தொல் மனை - ஒளிவீசும் பழைய அரண்மனையானது;
 கீழைநாள் வான ஏறுஎறிய -
விடியற்காலை பேரிடிகள் தாக்கப் பெற்றதால்; கீண்டது - பிளக்கப்பட்டு
இடிந்தன.

     கீழைநாள் -நாளின் கீழ்ப்பகுதி வைகறைவிடியல். மேல்பகுதி -
மாலையாகும்.                                              (42)