5117. | 'மன்னவன்தேவி, அம் மயன் மடந்தைதன் பின் அவிழ்ஓதியும், பிறங்கி வீழ்ந்தன; துன் அருஞ் சுடர்சுடச் சுறுக்கொண்டு ஏறின; இன்னல் உண்டுஎனும் இதற்கு ஏது ஈது எனா; |
மன்னவன் தேவி -அரசனானஇராவணனின் தேவியாகிய; அ மயன் மடந்தை தன் - அந்த மயனின் புதல்வியாகிய மண்டோதரியின்; அவிழ் பின்ஓதியும் - நெகிழ்ந்த பின்னலையுடைய கூந்தலும்; பிறங்கி வீ்ழ்ந்தன - மாறுபட்டுப் பூமியில் விழுந்தன (அந்தக் கூந்தல்); துன் அரும் - நெருங்க முடியாத (வெப்பமான); சுடர் சுட - நெருப்புச் சுடுதலால்; சுறுக்கொண்டு ஏறின - சுறு நாற்றம் மிக்கன; இதற்கு ஏது ஈது - இந்த நிகழ்ச்சிக்கு ஏது வாசகம். இதுவே; இன்னல் உண்டு எனும் - (இராவணன் செய்த) துன்பம் மிகுதி; என்பதே எனா - என்பதேயாகும். என்று சொன்னாள். கொண்டு - அசை.அன்றேல், சுறு நாற்றத்தைப் பரப்பிக் கொண்டு இருந்தன என்றும் கூறலாம். 'என்று கொண்டு இளையர் கூறி' ஏது - ஆராய்ச்சி. (கம்ப. 1605) (49) |