5119.

'வரம்பு இலா மத கரி உறையும் அவ் வனம்
நிரம்புறவளைந்தன; நெருக்கி நேர்ந்தன;
வரம்பு அறுபிணம்படக் கொன்ற; மாறு இலாப்
புரம் புக இருந்ததுஓர் மயிலும், போயதால்.

     வரம்பு இலா -கட்டுப்பாடு என்பது இல்லாத; மத கரி உறையும் - மதயானைகள் வாழ்கின்ற; அவ்வனம் - அந்த வனம் (சிங்கங்கள்); நிரம்பு
உற -
முடிதல் அடைய; வளைத்தன - சுற்றிக் கொண்டன; நெருக்கி
நேர்ந்தன -
நெருக்கிப் போர் செய்தன (அப்போது); வரம்பு அறு -
எல்லையற்ற; பிணம்படக் கொன்று - பிணங்கள் விழும்படிக் கொன்று; மாறு
இலா -
பகைமையில்லாத; புரம்புக - தம்முடைய நகரை அடைவதற்காக;
இருந்தது ஓர்மயிலும் - அங்கே தங்கியிருந்த ஓர் மயிலும்; போயது - வெளிப் போயது.

    வனம் - இலங்கை.இரண்டு சிங்கங்கள் - இராமலக்குவர்கள் மயில் -
பிராட்டி. மாறிலாப் புரம் - அயோத்தி. இவை கனவின் குறிப்புகள்.     (51)