5120.

'ஆயிரம்திருவிளக்கு அமைய மாட்டிய
சேயொளிவிளக்கம் ஒன்று ஏந்தி, செய்யவள்,
நாயகன்திருமனைநின்று, நண்ணுதல்
மேயினள்,வீடணன் கோயில்;-மென் சொலாய் !

     மென் சொலாய் -மென்மையாகப் பேசும் பிராட்டியே; ஆயிரம்
திருவிளக்கு -
ஆயிரம் விளக்குகள்; அமைய மாட்டிய - பொருத்தமாக
அமைந்த; சேய் ஒளி விளக்கம் - நீண்டதூரம் ஒளி தரும் அடுக்குத்
தீபமாகிய; ஒன்று ஏந்தி - ஒரு விளக்கை ஏந்திக் கொண்டு; செய்யவள் -
சிவந்த நிறமுடைய பெண்; நாயகன் திருமனை நின்று - அரசனான
இராவணனின் அரண்மனையிலிருந்து; வீடணன் கோயில் - வீடணனின்
கோயிலை; நண்ணுதல் மேயினள் - அடைதலைப் பொருந்தினாள்.    (52)