அனுமன்சீதையின் இருக்கையைக் காணுதல் 5122. | இவ் இடை,அண்ணல் அவ் இராமன் ஏவிய வெவ் விடை அனையபோர் வீரத் தூதனும், அவ் இடைஎய்தினன், அரிதின் நோக்குவான், நொவ் இடைமடந்தைதன் இருக்கை நோக்கினான் |
இவ் விடை -இந்தச்சமயத்தில்; அண்ணல் - பெருமை மிக்க; அ இராமன் ஏவிய - அந்த இராம பிரானால் அனுப்பப் பெற்ற; வெவ் விடை அனைய - ஆற்றல் மிக்க காளை போன்ற; போர் வீரத் தூதனும் - போர் வீரம் பெற்ற தூதனாகிய அனுமன்; அரிதின் நோக்குவான் - (சோலையின் செறிவால்) சிரமப்பட்டுப் பார்ப்பவனாய்; அ இடை மடந்தை தன் - அந்த அசோகவனத்தை அடைந்து; நொவ் இடை மடந்தை தன் - வருந்தும் இடையை உடைய பிராட்டி; இருக்கை - அமர்ந்து தவம் செய்வதை; நோக்கினான் - பார்த்தான். நோற்பதைநோக்கினான். 'மாண நோற்று ஈண்டு இவள் இருந்த ஆறு', (கம்ப. 5141) என அனுமன் பேசுவான். (54) |