5130.

'அரக்கியர், அயில் முதல் ஏந்தும் அங்கையர்,
நெருக்கியகுழுவினர், துயிலும் நீங்கினர்,
இருக்குநர்; மற்றுஇதற்கு ஏது என் ?' எனா,
பொருக்கெனஅவரிடைப் பொருந்த நோக்கினான்.

     அரக்கியர் -அரக்கிமார்கள்; அயில் முதல் ஏந்தும் - வேல் முதலானஆயுதங்கள் ஏந்திய; அங்கையர் - கையை உடையவராய்;
நெருக்கியகுழுவினர் -
அடர்ந்த கூட்டத்தினராய்; துயிலும் நீங்கினார் -
உறக்கத்திலிருந்து எழுந்தவராய்;  இருக்குநர் - இருக்கின்றார்கள்; இதற்கு
ஏது என் எனா -
(இவ்விரவில்) இவ்வாறு இருப்பதற்குக் காரணம் யாது
என்று ஆராய்ந்து; பொருக்கென - விரைவாக; அவர் இடை -  அவ்
வரக்கியர்களுக்கு நடுவே; பொருந்த நோக்கினான் - உற்றுப் பார்த்தான்.

    இரவிலேஅரக்கியர்கள் ஆயுதங்கள் ஏந்தியபடி உறங்காமல் உள்ளனர்.
இதற்குக் காரணம் யாது என்று கருதி கூர்ந்து பார்த்தான்.           (62)