அனுமன்மகிழ்ச்சி 5135. | 'வீடினதுஅன்று அறன்; யானும் வீகலேன்; தேடினென்கண்டனென்; தேவியே !' எனா,- ஆடினன்; பாடினன்;ஆண்டும் ஈண்டும் பாய்ந்து, ஓடினன்;உலாவினன்;-உவகைத் தேன் உண்டான். |
(அனுமன்) உவகைத் தேன்உண்டான் - மகிழ்ச்சியாகியதேனைக் குடித்து; அறன் வீடினது அன்று - தருமம் அழியவில்லை; யானும் வீகலேன் - யான் அழிய மாட்டேன்; தேடினென் - பிராட்டியைத் தேடிய யான்; கண்டனென் - கண்டு கொண்டேன்; தேவியே - (இவள்) சீதாதேவியே; எனா - என்று கூறி; ஆடினன் பாடினன் - ஆடிப் பாடினான்; ஆண்டும் ஈண்டும் பாய்ந்து - அங்கும் இங்கும் பாய்ந்து; ஓடினன் உலாவினன் - ஓடி உலாவினான். முன்புபிராட்டியைக் காணாதபோது வீடுவேன் (காட்சி 1) (இறப்பேன்) என்றவன் பிராட்டியைக் கண்டதும் வீகலேன் (இறவேன்) என்றான். (67) |