5142.

'முனிபவர்அரக்கியர், முறையின் நீங்கினார்;
இனியவள்தான்அலாது, யாரும் இல்லையால்;
தனிமையும்,பெண்மையும், தவமும், இன்னதே !-
வனிதையர்க்குஆக, நல் அறத்தின் மாண்பு எலாம் !

     இனியவள் தான்அலாது - இனிமையைச் செய்யும் பிராட்டியைத்
தவிர; யாரும் இல்லை - வேறு யாரும் அவளுக்குத் துணையில்லை;
முறையின் நீங்கினார் அரக்கியர் - முறையற்றவர்களாகிய அரக்கியர்;
முனிபவர் - பிராட்டியைக் கோபிப்பவர்; தனிமையும் - (இந்நிலையில்
இவளது) தனித்து இருக்கையும்; பெண்மையும் - அமைதித் தன்மையும்;
தவமும் - கற்புத் தவமும்; இன்னது - இப்படிப்பட்டதாகும்; அறத்தின்
மாண்பு எலாம் -
அறத்தின் எல்லாச் சிறப்புக்களும்; வனிதையர்க்கு ஆக -
பெண்கள் பொருட்டு அமைக்கப்பட்டவையே  ஆக.                (74)