5144.

'செல்வமோஅது ? அவர் தீமையோ இது ?
அல்லினும்பகலினும் அமரர் ஆட் செய்வார்,
ஒல்லுமோஒருவர்க்கு ஈது ? உறுகண் யாது இனி ?
வெல்லுமோதீவினை, அறத்தை மெய்ம்மையால் ?'

(அரக்கர்களுக்கு)

     அல்லினும்பகலினும் - இரவுப் போதிலும் பகற்போதிலும்; அமரர்
ஆட் செய்வார் -
தேவர்கள் அடிமைத் தொழில் புரிவார்கள்; அவர்
செல்வமோ அது -
அவர்களுடைய செல்வமோ அப்படி உள்ளது; அவர்
தீமையோ இது -
அவர் செய்கின்ற கொடுமையோ இப்படியுள்ளது; ஈது
ஒருவர்க்கு ஒல்லுமோ -
இந்த நிலைமையானது ஒருவருக்கு அடுக்குமா;
தீவினை - தீவினையானது; அறத்தை - தருமத்தை; வெல்லுமோ -
வென்றுவிடுமோ (வெல்லாது ஆதலால்); இனி உறுகண் யாது - இனிமேல்
உலகத்திற்குத் துன்பம் ஏது ?

     'அறம் வெல்லும்பாவம் தோற்கும்' என்ற உண்மை காவியத்தில்
அங்கங்கே கலியால் சுட்டிச் செல்லப் படுகிறது.                     (76)