5155.

அம் கயல்கருங் கண் இயக்கியர், துயக்கு இல்
     அரம்பையர், விஞ்சையர்க்கு அமைந்த
நங்கையர், நாகமடந்தையர், சித்த
     நாரியர்,அரக்கியர் முதலாம்,
குங்குமக்கொம்மைக் குவி முலை, கனி வாய்,
     கோகிலம்துயர்ந்த மென் குதலை,
மங்கையர்ஈட்டம் மால் வரை தழீஇய
     மஞ்ஞை அம்குழு என மயங்க;

     அம் கயல்கருங்கண் - அழகிய மீன் போன்றகருங்கண்களைப்
பெற்ற; இயக்கியர் - யட்சப் பெண்கள்; துயக்கு இல் - தளர்ச்சி இல்லாத;
அரம்பையர் -
தேவ மகளிர்; விஞ்சையர்க்கு அமைந்த - வித்தியாதரர்க்கு
உரிய; நங்கையர் - மகளிர்; நாக
மடந்தையர் - நாகலோகக்கன்னியர்கள்;
சித்த நாரியர் -
சித்த குலப் பெண்கள்; அரக்கியர் முதலாம் - அரக்கியர்
முதலான; குங்குமம் - கும்குமச் சாந்து அணியப் பெற்றதும்; கொம்மை -
பருத்ததும்; குவி முலை - திரண்டதும் ஆகிய தனங்களையும்; கனிவாய் -
கோவைப்பழம் போன்ற வாயையும்; கோகிலம் துயர்ந்த குதலை - குயில்கள்
வருந்தும் மொழிகளையும் உடைய; மங்கையர் ஈட்டம் - மகளிரின் தொகுதி;
மால்வரைதழீஇய -
கருத்த மலையைச் சார்ந்த; மஞ்சை அம் குழுஎன -
அழகியமயில் கூட்டம் போல; வயங்க - விளங்கவும்.

     துயக்கு -தளர்ச்சி. 'துயக்கு அற அறிந்து' (மணிமேகலை 27-19)
கோகிலம் வருத்தம் அடைவதற்கு ஏதுவான மொழி. துயர்ந்த - வருந்த
'ஆறாது துயரும் என் உள்' (அகம் 195)                        (87)