5162. 

ஆர்கலிஅகழி, அரு வரை, இலங்கை,
     அடிபெயர்த்து இடுதொறும் அழுந்த,
நேர்தரும்பரவைப் பிறழ் திரை, தவழ்ந்து
     நெடுந்தடந் திசைதொறும் நிமிர,
சார்தரும் கடுவின் எயிறுடைப் பகு வாய்
     அனந்தனும்தலை தடுமாற,
மூரி நீர் ஆடைஇரு நில மடந்தை,
     முதுகு உளுக்குற்றனள் முரல;

     ஆர்கலி அகழி -கடலையேஅகழாகப் பெற்ற; அருவரை இலங்கை
-
திரிகூட மலையில் அமைந்த அரிய இலங்கை; அடிபெயர்த்திடும் தொறும்
-
(இராவணன்) பாதம் பெயர்த்து வைக்கும் போதெல்லாம்; அழுந்த - கீழே
அமிழவும்; நேர்தரும் - இலங்கையைச் சூழ்ந்துள்ள; பரவைப் பிறழ்திரை -
கடலில் புரள்கின்ற அலைகள்; தவழ்ந்து - தத்திச் சென்று; நெடும் தடம்
திசை தொறும் -
நீண்ட பெரிய திக்குகள் தோறும்; நிமிர - கொந்தளிக்கவும்;சார் அரும் - அணுக முடியாத; கடுவின் எயிறுடை -
விடப் பற்களையும்;பகுவாய் - பிளந்த வாயையும்
 (பெற்ற); அனந்தனும் -
ஆதிசேடனும்; தலைதடுமாற - நிலைகுலையவும்; மூரி நீர் ஆடை -
வலிமை மிக்க கடலை ஆடையாகப் பெற்ற; இரு நில மடந்தை - பெரிய பூமி
தேவியானவள்; முதுகு உளுக்குற்றனள் -  முதுகு நெளியப் பெற்று; முரல -
சுற்றவும்.

    உளுக்குதல் -நெளிதல். 'நிலம் முதுகு உளுக்கிக் கீழ் உற' (கம்ப. 675,
2408)                                                     (94)