இராவணன் சீதையைஇரத்தல் 5169. | அவ் இடத்துஅருக எய்தி, அரக்கன்தான், 'எவ் இடத்துஎனக்கு இன் அருள் ஈவது ? நொவ் இடைக்குயிலே ! நுவல்க' என்றனன், வெவ் விடத்தைஅமிழ்து என வேண்டுவான். |
வெவ்விடத்தை -கொடியநஞ்சினை; அமுதென - அமுதம் என்று கருதி; வேண்டுவான் அரக்கன் தான் - (அதை) விரும்பும் இராவணன் தான்;அவ் இடத்து - அந்த இடத்திலே; அருகு எய்தி - பக்கத்தை எய்தி; நொவ்இடைக்குயிலே - வருந்தும் இடைபெற்ற குயில் போன்றவளே; எனக்கு -(உன்பால் அன்புடைய) எனக்கு; அருள் ஈவது - அருளை வழங்குவது; எவ்இடத்து - எப்போது; நுவல்க என்றனன் - கூறுக என்றான். நொ - வருத்தம்.அமர்ந்தனன் என்னும் முற்று வினை எச்சப் பொருளில் வந்தது. இது முதல் 14 பாக்கள் இராவணன் மொழிகள். (101) |