'போழ்ந்தனயான் செய்த குறை பொறுக்க !' எனா, வீழ்ந்தனன்அடிமிசை; வீழ, வாலி சேய், தாழ்ந்து, கைப்பற்றி, மெய் தழீஇக்கொண்டு, 'உம்மை யான் சூழ்ந்ததும்பொறுக்க !' எனா, முகமன் சொல்லினான்.
ததிமுகனும் அங்கதனும்ஒருவர்க்கொருவர் மன்னி்ப்புக் கேட்டுசமாதானம் அடைதல். (19-17)