5172.

'உலகம் மூன்றும் ஒருங்குடன் ஓம்பும் என்
அலகு இல்செல்வத்து அரசியல் ஆணையில்,
திலகமே ! உன்திறத்து அனங்கள் தரு
கலகம் அல்லது,எளிமையும் காண்டியோ ?

    திலகமே ! -பெண்களுக்குள் திலகம் போன்றவளே; உலகம் மூன்றும்
-
மூன்று உலகத்தையும்; ஒருங்குடன் - ஒரு சேர; ஓம்பும் - பாதுகாக்கும்;
என் -
என்னுடைய; அலகு இல் - அளவில்லாத; செல்வத்து -
செல்வத்தைப் பெற்ற; அரசியல் ஆணையில் - அரசாட்சியின் அதிகாரத்தில்;
உன் திறத்து -
உன்  காரணமாக; அனங்கன் தரு - மன்மதன் செய்யும்;
கலகம் அல்லது -
 போரேயல்லாமல்; எளிமை(யும்) - (வேறு) தாழ்ச்சியை;
காண்டியோ -
கண்டுள்ளாயா.

     என் நாட்டில்கலகம் உண்டு - எளிமை இல்லை என்றான். கலகம்
அல்லது எளிமையும் காண்டியால் - மன்மதன் கலகத்தை நீக்கினால் நான்
அடிமை செய்யும் எளிமையையும் பின்னிட்டுக் காண்பாய் என்பது பழைய
உரை (அடை - பதி) எளிமையும் - உம் - அசை.                (104)